\
Soulmates Oru Saathukkudi Pranayam movie updates
Soulmates Oru Saathukkudi Pranayamx page

கவனத்தை ஈர்க்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’.. படக்குழு செய்த சீக்ரெட்!

ஏற்கெனவே பெரிய அளவில் கவனம் ஈர்த்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெரிய ரீச் கிடைக்க ஒரு வேலையைச் செய்துள்ளது படக்குழு. அதுதான் இப்போது இணையத்தில் வைரல்.
Published on

நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்து பிரேமலு கிரிஷ் ஏ.டி. இயக்கி வெளியான மலையாளப் படம் `பெத்தலேகம் குடும்ப யூனிட்'. இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிமான வசூலைச் செய்துள்ளது. ரசிகர்களையும் இப்படம் நல்ல காமெடி படமாக கவர்ந்துள்ளது. ஏற்கெனவே பெரிய அளவில் கவனம் ஈர்த்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெரிய ரீச் கிடைக்க ஒரு வேலையைச் செய்துள்ளது படக்குழு. அதுதான் இப்போது இணையத்தில் வைரல்.

இப்படத்தின் கதைப்படி, சங்கீத் பிரதாப் நடித்த ஜோயல் டேவிஸ் என்ற கதாபாத்திரம் ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருப்பார். அவர் இயக்கும் குறும்படம்தான் ‘Soulmates – Oru Saathukkudi Pranayam’. படத்தின் முக்கியக் கதாபாத்திரமான ஜஸ்டின் டேவிஸ், அதாவது நிவின் பாலி, இந்தக் குறும்படத்தின் தயாரிப்பாளராக இருப்பார். இயக்குநராகும் கனவோடு இருக்கும் இளைஞன், தன்னுடைய முன்னாள் காதலியைச் சந்தித்தபின் என்ன நடக்கிறது என்பதே அந்தக் குறும்படத்தின் கதை.

`பெத்தலேகம் குடும்ப யூனிட்' படத்தில் ஜோயல் டேவிஸ் கதாபாத்திரம் இந்த ஒரு குறும்படத்தை உருவாக்க முயற்சி செய்வது பல நகைச்சுவை தருணங்களுக்கு காரணமாக இருக்கும். ஆனால், அந்தக் குறும்படம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் முழுமையாகப் பார்க்க முடியாது. அந்தச் சிறிய கதைத் துணுக்கை தற்போது தனி குறும்படமாக வெளியிட்டிருப்பது படத்தை ரசித்த பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘Soulmates’ குறும்படத்தில் வினீத் விஸ்வம் மற்றும் பார்வதி அய்யப்பதாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேசமயம், ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ படத்துடன் தொடர்புடைய கதாபாத்திரங்களாக நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோரும் கேமியோ தோற்றங்களில் வருகின்றனர். 

‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ உருவாக்கிய கற்பனை உலகின் ஒரு நீட்சியாகவே ‘Soulmates’ உருவாக்கப்பட்டுள்ளது. குறும்படம் வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறும்படங்களின் ஸ்பூஃப் செய்யும் விதமாக மற்றும் சினிமா கிளிஷேக்களை கிண்டல் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது  சிலர் இதை உண்மையான குறும்படம் என்று நினைத்து விமர்சித்த நிலையில், மற்றொரு தரப்பினர் “இது ஒரு ஸ்பூஃப்; ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ படத்தின் உலகை புரிந்துகொண்டால்தான் இதன் நகைச்சுவை புரியும்” என்று விளக்கி வருகிறார்கள். 

இந்தத் தொடரையும் படிக்க: சக்கரங்கள் சொல்லும் கதை – 6 | பேட்டரி இதயம் சார்ஜிங் உயிர்நாடி! (EV-யின் ‘கரன்ட்’ ரகசியங்கள்!)

படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு ‘Soulmates’ ஒரு சாதாரண குறும்படம் அல்ல. திரையரங்கில் சிரித்த ஒரு நகைச்சுவை காட்சிக்கு இப்போது முழுமையான வடிவம் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, ஜோயல் டேவிஸ் கதாபாத்திரத்தை விரும்பியவர்களுக்கு, அவர் உருவாக்கியதாகச் சொல்லப்படும் படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ஒரு படத்திற்குள் உருவான கற்பனைப் படம்… உண்மையில் வெளியாகும்போது என்ன நடக்கும்? அதற்கான பதில்தான் ‘Soulmates – Oru Saathukkudi Pranayam’. ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ படத்தின் நகைச்சுவை உலகத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்து, ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு ‘Bonus Content’ கொடுத்திருக்கிறது இந்த குறும்படம்.

ஒரு படத்தின் புரமோஷனுக்காக டீசர், ட்ரெய்லர், பாடல்கள், இன்டர்வியூ என வழக்கமான முறைகள் இருக்கின்றன. ஆனால் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ குழு அதைவிட வித்தியாசமான ஒரு முயற்சியைச் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ படத்தின் உலகம் திரையரங்கத்தோடு முடிவடையாமல் YouTube-க்கும் விரிவடைந்துள்ளது. இதற்குக் கிடைத்த வரவேற்பினால் வெளியான சில மணி நேரங்களிலேயே ‘Soulmates’ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றதாகவும், குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com