விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ‘பரோட்டா’ சூரி
நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகர் சூரி மீண்டும் இணைகிறார்.
விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’,‘பேட்ட’ படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியானது. இதனையடுத்து, அருண்குமார் இயக்கத்தில் சிந்துபாத், சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
‘பேட்ட’,‘சீதக்காதி’ படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். விக்ரம் நடிப்பில் உருவான ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியவர் விஜய் சந்தர். பெயரிடப்படாத இந்தப் புதிய படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். விஜயா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளர்.
விஜய் சந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தில் சூரி ஒப்பந்தமாகியுள்ளார். சூரி ஏற்கனவே ‘சுந்தர பாண்டியன்’,‘ரம்மி’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். இரண்டு படங்களில் சூரியின் கமெடி நன்றாக அமைந்து இருந்தது.
பட அறிவிப்பு வெளியானது முதல் அதிகாரப்பூர்வமாக சூரிதான் முதலில் இணைந்துள்ளார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால், மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.