சினிமா
வெற்றிமாறனை தொடர்ந்து அமீர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி?
வெற்றிமாறனை தொடர்ந்து அமீர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி?
அமீர் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் காவலராக நடிக்கும் சூரியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
சிவகார்த்திகேயனின் ‘டான்’, கார்த்தியின் ‘விருமன்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்டப் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துவரும் சூரி, அமீர் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ‘ஆதிபகவன்’ படம் அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளியானது.

