மாமன்னன் ஆடியோ ரிலீஸ், சூரி
மாமன்னன் ஆடியோ ரிலீஸ், சூரிtwitter page

தோனியுடன் உதயநிதியை ஒப்பிட்டுப் பேசிய நடிகர் சூரி! எதற்கு தெரியுமா?

’மாமன்னன்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், தோனியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நடிகர் சூரி ஒப்பிட்டுப் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (ஜூன் 1) நடைபெற்றது.

இவ்விழாவில், பேசிய நடிகர் சூரி, “திரைப்படம் ஒன்று ரிலீஸாகி, எவ்வித பரபரப்பை ஏற்படுத்துமோ, அத்தகைய பரபரப்பை ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் என அனைத்துமே மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. அதற்குக் காரணம் அப்படத்தில் பணியாற்றியவர்கள். இரண்டு படம் மட்டுமே செய்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், 10 படம் செய்த இயக்குநராக உலக தமிழர்களிடம் அறியப்படுகிறார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், வைகைப்புயல் வடிவேலு என இரண்டு புயல்கள் இதில் பணியாற்றியுள்ளனர். ஒரு புயலுக்கே ஜன்னல் மற்றும் கதவுகளை பூட்டி வையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படியான சூழலில் இதில் இரண்டு புயல்கள் உள்ளே இருக்கின்றன. ஆகையால் இப்படம் பெரிய அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். உதயநிதி ஸ்டாலினுடன் நான் 3 படங்கள் நடித்துள்ளேன். அவர் ஓர் அற்புதமான மனிதர். குறிப்பாக, அவருக்கு இப்படம் மிகப்பெரிய மாற்றத்தைத் தரும் என்று நினைக்கிறேன். இதற்குப் பிறகு, அவர் எத்தனை படங்கள் நடிக்கிறார் என்று தெரியாது. ஆனால், இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய படமாக அமையும்” எனப் பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சூரி, “சென்னை அணி கேப்டன் தோனி, ‘கடைசி போட்டி’ என்றுதான் சொன்னார். ஆனால், அவருடைய முடிவு மாறவில்லையா? அதுபோல், உதயநிதிக்கும் இந்தப் படம் வெளிவந்த பிறகு, அவர் இன்னும் 2-3 படங்கள் நடிக்கலாம் என்று தோன்றலாம். நடித்தாலும் சந்தோஷம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com