சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக "காட்டுப் பயலே" பாடலின் 1 நிமி" வீடியோ ரிலீஸ் !

சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக "காட்டுப் பயலே" பாடலின் 1 நிமி" வீடியோ ரிலீஸ் !

சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக "காட்டுப் பயலே" பாடலின் 1 நிமி" வீடியோ ரிலீஸ் !
Published on

சூர்யா பிறந்தநாள் பரிசாக "சூரரைப் போற்று"திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்டுப் பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். "ஏர் டெக்கான்" உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வந்தன. முன்னதாக இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திரைத்துறை முற்றிலுமாக முடங்கியது. ஆனால் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் தணிக்கை முடிந்து "சூரரைப் போற்று" படத்துக்கு "யூ" சான்றிதழ் கிடைத்துவிட்டது. இப்படத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியது. இப்போது மூன்றாவதாக "காட்டுப் பயலே" என்ற பாடல் சூர்யாவின் பிறந்தநாளான இன்று 1 நிமிட வீடியோவாக வெளியாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார், தீ என்பவர் பாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com