மூன்று ஆதரவற்றக் குழந்தைகளைத் தத்தெடுத்த சோனு சூட்!

மூன்று ஆதரவற்றக் குழந்தைகளைத் தத்தெடுத்த சோனு சூட்!

மூன்று ஆதரவற்றக் குழந்தைகளைத் தத்தெடுத்த சோனு சூட்!
Published on

கொரோனா ஊரடங்கு சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் நடிகர் சோனு சூட் சமீபத்தில் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். சமீபத்தில்தான் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, காய்கறி விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு வேலை வாங்கிக்கொடுத்தது என்று அனைவரின் பாராட்டுகளை குவித்தவர், தற்போது ஆரவற்றக் குழந்தைகளை தத்தெடுத்திருப்பதன் மூலம் இன்னும்  போற்றப்படுகிறார்.

ராஜம் கர்ணம் என்ற பத்திரிகையாளர் டிவிட்டரில் ஆந்திராவின் புவனகிரியைச் சேர்ந்த மூன்று ஆதரவற்றக் குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு உதவி கோரியிருந்தார். “அவர்கள் இனி ஆதரவற்றவர்கள் அல்ல. இனி என் பொறுப்பில் இருப்பார்கள்” என்று சோனு சூட் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com