தமிழில், கள்ளழகர், மஜ்னு, அருந்ததி, ஒஸ்தி, சாகசம், தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் சோனு சூட். அவருக்கு இன்று 43-வது பிறந்த நாள்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ’எனது பெற்றோரின் மறைவுக்கு பிறகு பிறந்த நாள் கொண்டாடுவதை நிறுத்திவிட்டேன். அவர்கள் இருந்தபோது சிறப்பாகக் கொண்டாடுவேன். எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பதற்காக பஞ்சாபில் இருந்து நாக்பூருக்கு வந்த நேரத்தில் எனது பிறந்தநாளுக்கு எனது தந்தை பைக் வாங்கிக்கொடுத்தார். அதுதான் எனக்கு ஸ்பெஷலான பிறந்தநாள். சினிமாவுக்கு வந்த பிறகு இங்கு அதிக நாட்கள் தாக்குப்பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால், இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 80 படங்கள் வரை நடித்துவிட்டேன். ஜாக்கிசான் கூட நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது குங்க்பூ யோகா படத்தில் அவருடன் நடித்துள்ளேன்’ என்றார்.