”என் கூட தெ.ஆப்ரிக்கா வர்றீங்களா?” சாலையோர சமோசா கடைக்காரருக்கு ஷாக் கொடுத்த சோனு சூட்

”என் கூட தெ.ஆப்ரிக்கா வர்றீங்களா?” சாலையோர சமோசா கடைக்காரருக்கு ஷாக் கொடுத்த சோனு சூட்
”என் கூட தெ.ஆப்ரிக்கா வர்றீங்களா?” சாலையோர சமோசா கடைக்காரருக்கு ஷாக் கொடுத்த சோனு சூட்

ரோடீஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக தென்னாப்ரிக்க செல்லவுள்ள நடிகர் சோனு சூட் இந்திய சாலையோர கடைகளில் கிடைக்கும் சமோசாவை மிஸ் பண்ணுவதாக பகிர்ந்திருக்கிறார்.

'ரோடீஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் புதிய சீஸனை தொகுத்து வழங்க தென்னாப்ரிக்கா செல்லவிருக்கிறார் நடிகர் சோனு சூட். அதற்கு முன்பு அதுகுறித்து அவர் ஒரு வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். அதில், ‘’ என் வாழ்க்கையில் சாலையோர கடைகாரர்களுடன் ஒரு புதிய சாகசம் தொடங்கவிருக்கிறது. இந்த பயணம் அது மாதிரியான ஒன்றாக இருக்கும். இந்த சீஸனில் சிறந்த ரோடீஸ் பங்குபெறுவர். தென்னாப்ரிக்கா செல்வதற்கு முன்பு இப்போது சில சமோசாக்களை சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அங்கு இந்த சமோசாக்கள் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சமோசா கடைக்காரரிடம் தனது புதிய ஷோ பற்றி விளக்கிவிட்டு, அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்கிறார். அவர் வருகிறேன் என ஒப்புக்கொண்டதும், தென்னாப்பிரிக்காவில் இலவசமாக சமோசா வழங்குமாறு கேட்கிறார். மேலும், ரோடீஸ் குழுவிற்கு தென்னாப்ரிக்காவிலும் சமோசா கிடைக்கும் என்று கூறும் அவர், அடுத்த சீஸனுக்கு ரெடியாகச் சொல்கிறார். இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சோனுசூட் சாலையோர சமோசா கடையில் பேசிய வீடியோ பதிவை காண இங்கே க்ளிக் செய்யவும்..https://twitter.com/SonuSood/status/1490606910571429890

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com