\
தெலுங்கு படப்பிடிப்பில் சோனுசூட்: கைத்தட்டி பாராட்டிய பிரகாஷ் ராஜ்!

தெலுங்கு படப்பிடிப்பில் சோனுசூட்: கைத்தட்டி பாராட்டிய பிரகாஷ் ராஜ்!

தெலுங்கு படப்பிடிப்பில் சோனுசூட்: கைத்தட்டி பாராட்டிய பிரகாஷ் ராஜ்!
Published on

தெலுங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்ட சோனு சூட்டை, அதே படத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜ் பொன்னாடைப் போர்த்தி கைத்தட்டி பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தீடீரென அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை பேருந்துகள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பேருதவி செய்தார் வில்லன் நடிகர் சோனு சூட். ’படத்தில்தான் அவர் வில்லன் நடிகர். ஆனால், நிஜத்தில் ஹீரோ’ என்று இந்திய மக்களால் பாராட்டப்படுகிறார். அதேபோல, ட்விட்டரில் தன்னிடம் கோரிக்கை வைப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கடந்த ஆறு மாதமாக உதவி செய்து வந்தவர், தற்போது தெலுங்கு படமான ’அல்லு ஆதர்ஸ்’ பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் வந்துள்ளார். இப்படத்தில், நம்ம வீட்டுப் பிள்ளை ஹீரோயின் அனு இம்மானுவேல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சோனு சூட் நுழைந்தபோது, அவரின் சமூக சேவைகளுக்காக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மொத்த யூனிட்டினரும் மனம் திறந்து கைத்தட்டி பாராட்டியுள்ளனர்.

பிரகாஷ் ராஜ் அவர் வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு, அவர் நடிக்கும் கெட்டப்பிலேயே சோனுசூட்டிற்கு பொன்னாடையையும் பூச்செண்டையும் அளித்து கெளரவித்துள்ளார். அவர் பாராட்டிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com