சினிமா
எப்போது ஓயும் மதத்திணிப்பு? பிரபல பாடகர் சர்ச்சைப் பேச்சு
எப்போது ஓயும் மதத்திணிப்பு? பிரபல பாடகர் சர்ச்சைப் பேச்சு
இஸ்லாமிய மதம் திணிக்கப்படுகிறது என்னும் கருத்தைத் தெரிவிக்கும் நோக்கில் பாடகர் சோனு நிகம் டிவீட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரார்த்தனைக்காக விடுக்கப்படும் காலை அழைப்பினால் அவரது தூக்கம் தொலைகிறது என்னும் ரீதியில் அவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
”நான் முஸ்லீம் அல்ல. காலையில் அசான் என்னும் பிரார்த்தனை அழைப்பால் நான் எழுப்பப்படுகிறேன். இந்தியாவில், மதம் இப்படி வலிந்து திணிக்கப்படுவது எப்பொழுது ஓயும்?” என டிவீட் செய்துள்ளார்.
இதற்கு உடனுக்குடன் கருத்து தெரிவித்த ரசிகர்கள் மற்றும் அவரைப் பின்தொடர்பவர்கள், ”மற்ற மதங்களும் திருவிழாக்களின் போது ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துகிறது. அத்தகைய விழாக்களில் நீங்களே கலந்துகொள்கிறீர்கள். அது உங்களுக்குத் தெரியவில்லையா?’ என கருத்து தெரிவித்துள்ளனர்.