தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, தனது உடைகளை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார் நடிகை சோனம் கபூர். இவர் தனுஷ் இந்தியில் நடித்த ’ராஞ்ஜனா’ படத்தின் ஹீரோயின்.
பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வரும் சோனம் கபூர், இப்போது, கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், வறுமை ஒழிப்பு அமைக்கும் உதவ முடிவு எடுத்துள்ளார். இதற்காக தனது 12 ஸ்டைலிஷான உடைகளை ஏலம் விட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க இருக்கிறார்.