காதலரை கரம் பிடித்தார் சோனம் கபூர்

காதலரை கரம் பிடித்தார் சோனம் கபூர்

காதலரை கரம் பிடித்தார் சோனம் கபூர்
Published on

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர். ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் கொண்டவர். கடந்த 2013ம் ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் உடன் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும் நீண்டகாலமாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் அவர்களுக்குள் அழகிய காதல் உருவானது. இந்நிலையில் நேற்று இருவரும் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் சூழ இனிதே தம்பதிகளாக கரம் பிடித்தனர் சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹூஜா ஜோடி. ஏராளமான திரை நட்சத்திரங்களும் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அஹூஜா தொழிலதிபராக உள்ளார். சோனம் கபூர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பியும், இந்தி நடிகருமான அனில்கபூரின் மகள் ஆவார். தற்போது 4 இந்தி படங்களில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூர்- ஆனந்த அஹூஜா திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com