நான் யாருக்கு பிறக்க வேண்டுமென்பது என்னுடைய கர்மா - சோனம் கபூர்

நான் யாருக்கு பிறக்க வேண்டுமென்பது என்னுடைய கர்மா - சோனம் கபூர்

நான் யாருக்கு பிறக்க வேண்டுமென்பது என்னுடைய கர்மா - சோனம் கபூர்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெளிவானது.

சுஷாந்த் இறப்புக்கு பாலிவுட் திரையுலகம்தான் மிகப்பெரிய காரணம் என அத்திரையுலகைச் சேர்ந்த சிலரே நேரடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அரசியல் நடப்பதாகவும், ஸ்டார் கிட்ஸ் என்று அழைக்கப்படும் திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இணையவாசிகள் கொதித்தனர். ஸ்டார் கிட்ஸ்களின் அரசியல் நகர்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாலேயே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாகவும் இணையங்களில் கருத்துகள் தீயாய் பரவின. சோனம் கபூர், அலியாபட், வருண் தவான், கரண்ஜோகர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று தந்தையர் தினத்திற்கு சோனம் கபூர் பதிவிட்ட கருத்துக்கு கடுமையான எதிர்க் கருத்துகளை இணையவாசிகள் சிலர் பதிவிட்டனர். தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தையர் தினம் குறித்து பதிவிட்டிருந்த சோனம் கபூர், ''தந்தையர் தினத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஆமாம், நான் அப்பா மகள் தான். ஆமாம் நான் அவரால் தான் இங்கு இருக்கிறேன். நான் சலுகைப் பெற்றவள் தான். இதில் அவமதிப்பு ஏதும் இல்லை. எனக்கு இந்த இடத்தைக் கொடுக்க என் தந்தை கடுமையாக உழைத்துள்ளார். நான் யாருக்கு பிறக்க வேண்டும். எங்கு பிறக்க வேண்டுமென்பது என்னுடைய கர்மா. அவருடைய மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கும் கடுமையான எதிர்க் கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டனர். அதில் சில கருத்துகளையும் சோனம் கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com