\
''கடந்த 2 வருடமாகவே தனிமைதான்'' - ஊரடங்கு குறித்து பேசிய சோனாலி பிந்த்ரே

''கடந்த 2 வருடமாகவே தனிமைதான்'' - ஊரடங்கு குறித்து பேசிய சோனாலி பிந்த்ரே

''கடந்த 2 வருடமாகவே தனிமைதான்'' - ஊரடங்கு குறித்து பேசிய சோனாலி பிந்த்ரே
Published on: 

இந்த ஊரடங்கு எனக்கு கடினமானதாக இல்லை என நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்

தமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயினாக நடித்தார். 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்-லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். சோனாலி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு மன தைரியத்தால் அதனை எதிர்த்து போராடி வருகிறார்.

இந்நிலையில் லாக்டவுன் பற்றி தன்னுடைய கருத்தை அவர் பதிவிட்டுள்ளார். அதில், நான் நலமாக இருக்கிறேன். எனக்கு இந்த ஊரடங்கு பெரிய அவஸ்தையாக இல்லை. ஏனென்றால் நான் கடந்த இரண்டு வருடமாகவே தனிமையில் தான் இருக்கிறேன். ஆனால் என்னைக் காண வரும் விருந்தினர்களையும், என் நலம் விரும்பிகளையும் காணமுடியாதது வருத்தமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட என் பெற்றோரை காணமுடியாமல் தவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com