\
’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்!

’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்!

’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்!
Published on: 

நடிகை சோனாலி பிந்த்ரேவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான கோல்டி பெல் தெரிவித்துள்ளார்.

தமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயினாக நடித்தார்.2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்-லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.

43 வயதாகும் சோனாலி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் விரைவில் குணமாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சைக்கு முன், முடிகளை வெட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்கலங்கி இருந்தார் சோனாலி. இது பரபரப்பானது.

இந்நிலையில், நடிகை சோனாலி பிந்த்ரேவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான கோல்டி பெல், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’உங்கள் ஆதரவுக்கு அன்புக்கும் நன்றி. சோனாலிக்கு சிகிச்சை எந்தப் பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். இது நீண்ட பயணம். இதை பாசிட்டிவாக தொடங்கியிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com