பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி!
Published on

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ’தபாங் 3’ படத்தின் பாடல் காட்சி  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்கா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்த இந்தி படம், ‘தபாங்’. அபினவ் காஷ்யப் இயக்கி இருந்த இந்தப் படத்தை சல்மான் சகோதரர் அர்பாஸ் கான் தயாரித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்திருந்தது. இதில் சல்புல் பாண்டே என்ற போலீஸ் இஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் சல்மான். இது, தமிழில் தரணி இயக்கத்தில், சிம்பு நடிக்க, ’ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை.

’தபாங்’ படத்தின் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த சோனாக்‌ஷி சின்காவே இதிலும் நடித்திருந் தார். வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். சல்மானின் சகோதாரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படமும் ஹிட்டான து. இதையடுத்து இதன் மூன்றாம் பாகம் எடுக்கப்படுகிறது. அர்பாஸ் கான் தயாரிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார்.

சல்மான் கான் நடித்த ’வான்டட்’ படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இது தெலுங்கில் ஹிட்டான ’போக்கிரி’ படத்தின் ரீமேக். தொடர் தோல் விகளால் தவித்துக் கொண்டிருந்த சல்மான் கானுக்கு அந்தப் படம் மெகா ஹிட்டானது. இந்நிலையில் சல்மான் கானை பிரபுதேவா மீண்டும் இயக்குகிறார். மூன்றாவது முறையாக சோனாக்‌ஷி ஹீரோயினாக நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங் மத்திய பிரதேசத்தில் தொடங்கி நடந்து வரு கிறது. நர்மதை ஆற்றங்கரையில் நடனக்குழுவினருடன் சல்மான் கான் ஆடும் வீடியோ காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் செட்டில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று நடிகை சோனாக்‌ஷி சின்கா, இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com