நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதாகும். இந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
கர்ணன் திரைப்படம் பெரும் பெயரை பெற்று கொடுத்தது.. அதில் அவர் ஏற்று நடித்த கர்ணன் கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்றது.
1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழின் முதல் சினிமாஸ்கோப் பமும் இதுதான். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர்.
கப்பலோட்டிய தமிழன் இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம்பிள்ளை பற்றிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் தேச தலைவராக நடித்து அசத்தியிருப்பார்.
பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தேவர் மகன் 1992 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 1992 ஆண்டிற்கான 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இதில் கமல ஹாசன் சிவாஜியுடன் சேர்ந்து நடித்திருப்பார்
படையப்பா 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பார்
ஒன்ஸ்மோர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி மற்றும் பலர் நடிதுள்ளனர்.
கூண்டுக்கிளி1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ் திரையுலகின் அன்றைய இரு துருவ போட்டியாளர்களும் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஒரே திரைப்படமாக இந்த படம் அமைந்தது.
தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு பாராட்டப்பட்டது..
சிவாஜி கணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம் இது. இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். இந்த கதாப்பாத்திரம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. 1964-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்