அர்ஜூனின் ‘சொல்லிவிடவா’ டீசர் நாளை வெளியீடு

அர்ஜூனின் ‘சொல்லிவிடவா’ டீசர் நாளை வெளியீடு
அர்ஜூனின் ‘சொல்லிவிடவா’ டீசர் நாளை வெளியீடு

அர்ஜூனின் ‘சொல்லிவிடவா’ படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நடிகர் அர்ஜூன் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சொல்லிவிடவா’. இரண்டு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. முதலில் இதற்கு ‘காதலின் பொன் வீதியில்’ என்று தலைப்பு வைத்திருந்தார்கள். இது கலர் ஃபுல் காமெடி கலந்த காதல் திரைப்படம். இந்தப் படத்தில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். 
இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், "மொட்டை" ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹெச்.சி.வேணு கோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களுக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்கிறார். கேகே படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப் பட இருக்கிறது. அதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com