புதுப்பேட்டைக்கு பின்பு தனுஷுடன் இணையும் சிநேகா?

புதுப்பேட்டைக்கு பின்பு தனுஷுடன் இணையும் சிநேகா?

புதுப்பேட்டைக்கு பின்பு தனுஷுடன் இணையும் சிநேகா?
Published on

13 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷூடன் நடிகை சிநேகா ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் வெற்றி மாறனும் தனுஷும் மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

அசுரன் படத்தை அடுத்து இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சிநேகா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

13 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷுடன் சிநேகா ஜோடி சேர்வதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் 2006 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் தனுஷுடன் சிநேகா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com