\
’தனுஷ் 43’ படத்தில் இணைந்த ’மூக்குத்தி அம்மன்’ புகழ் ஸ்மிருதி வெங்கட்!

’தனுஷ் 43’ படத்தில் இணைந்த ’மூக்குத்தி அம்மன்’ புகழ் ஸ்மிருதி வெங்கட்!

’தனுஷ் 43’ படத்தில் இணைந்த ’மூக்குத்தி அம்மன்’ புகழ் ஸ்மிருதி வெங்கட்!
Published on

கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்துள்ளார், தடம், மூக்குத்தி அம்மன் புகழ் ஸ்மிருதி வெங்கட்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ விரைவில் வெளிவரவிருக்கின்றன.  இதனைத்தொடர்ந்து, தனுஷின் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.  ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்ட ’தடம்’ படத்தின் ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட் தனுஷ் படத்தில் இணைந்துள்ளார். இவர், சமீபத்தில் வெளியான ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் எப்போதும் சமையல் அறையில் சமைத்துக்கொண்டே இருக்கும் ஆர்.ஜே பலாஜியின் பரிதாப தங்கையாக நடித்து பாராட்டுக்களைக் குவித்தார். இவரது காட்சிகள் அனைவரையும் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இவர் ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்மிருதி வெங்கட் தனுஷுக்கு தங்கையாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com