\
தீபாவளிக்கு விக்ரமின் ’ஸ்கெட்ச்’

தீபாவளிக்கு விக்ரமின் ’ஸ்கெட்ச்’

தீபாவளிக்கு விக்ரமின் ’ஸ்கெட்ச்’
Published on

விக்ரம், தமன்னா ஜோடியாக நடிக்கும் படம், ’ஸ்கெட்ச்’.  சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீமன், மதுமிதா, வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். இசை, தமன். ஒளிப்பதிவு, சுகுமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்சந்தர் இயக்குகிறார். இவர் சிம்பு நடித்த ’வாலு’ படத்தை இயக்கியவர். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் பாடல் வெளியீடு விரைவில் நடக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com