சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தில் இணைந்த சிவாங்கி! - அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தில் இணைந்த சிவாங்கி! - அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தில் இணைந்த சிவாங்கி! - அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தில் இணைந்திருக்கிறார் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி. 

விஜய் டிவியின் ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இனிமையான குரலால் பாடல்களைப் பாடி மனம் மயக்க வைத்தது மட்டுமல்ல; மனம் விட்டு சிரிக்கவும் வைத்தவர் சிவாங்கி. தற்போது ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை ‘குக் வித் சிவாங்கி’ நிகழ்ச்சியாகவே பார்க்கத்தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள். அந்தளவிற்கு காமெடியில் அதகளம் செய்து அசத்தி வருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ‘சிவாங்கிக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கிறோம்’ என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விடும் அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாள வங்கியை வைத்துள்ளார் சிவாங்கி.

காமெடியில் கலக்கும் பெண்கள் மிகவும் குறைவு. அதுவும், இளம்வயது பெண்களை விரல்விட்டுக்கூட எண்ண முடியாத அளவிற்குதான் இருக்கிறார்கள். பெண்களாலும் காமெடி செய்ய முடியும்; அதுவும், இளம் பெண்களுக்கும் காமெடி வரும்; அவர்களும் காமெடியில் கலக்குவார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார் சிவாங்கி

சமீபத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் ’நான் சிவாங்கியின் ஃபேன்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது  'டான்' படத்தில் சிவாங்கி நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இன்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பதால், சிவாங்கி ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com