”புது உலகத்துக்கு செல்ல தயாராகுங்க” - ஒருவழியாக அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு!

சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி படத்தை போலவே இதுவும் பட்ஜெட் காரணத்தால் கிடப்பில் போடப்பட்டதா என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன.
Ayalaan Poster
Ayalaan PosterTwitter

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ஃபேன்டசி, சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகிறார் ரவிக்குமார். இந்த படத்துக்கு ஏ.ஆர்ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இஷா கோபிகர், பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர், கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

Twitter

படத்தில் இடம்பெற்றுள்ள வேற லெவல் சகோ பாடலை தவிற வேறு எந்த அப்டேட்டும் வராததால் சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி படத்தை போலவே இதுவும் பட்ஜெட் காரணத்தால் கிடப்பில் போடப்பட்டதா என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில், படத்தின் முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது என்றும், இதுநாள் ஏன் படத்தின் வேலைகள் நீடித்து வந்தது என்பது குறித்தும் அயலான் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், “ஏப்ரல் 24 , 2023 காலை 11.04 மணிக்கு அயலான் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம்.

@kjr_studios, twitter

அயலான் ஒரு பான் - இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் படமாக உருவாகியுள்ளது. படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 4500க்கும் மேலான VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்‌ஷன் படமாக அயலான் இருக்கும் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாக அயலான் இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.

@kjr_studios, twitter

அயலான் மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்துக்கு செல்ல தயாராகுங்கள்” என KJR ஸ்டுடியோஸ் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் படத்தின் அப்டேட் வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிர்வாகம் போஸ்டர் வெளியிட்டதை அடுத்து ட்விட்டரில் #Ayalaan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com