விஜய்சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்
Published on

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன், விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன்  படத்துடன் மோத உள்ளது. 


ஆயுத பூஜை விருந்தாக செப்டம்பர் 28-ஆம் தேதி மகேஸ்பாபு நடித்துள்ள ஸ்பைடர்,  சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள செம, நயன்தாரா  நடித்துள்ள அறம், பலூன், ரிச்சி, ஹரஹரமகாதேவகி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள்  ரிலீசாக உள்ளன. சமீபகாலமாக பண்டிகை தினங்களில் நான்கைந்து படங்களே ரிலீசாகி  வந்தன. இந்நிலையில், ஆயுத பூஜைக்கு அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாக உள்ளன.  இருப்பினும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படமும், சிவகார்த்திகேயன்  இயக்கியுள்ள வேலைக்காரன் படமும் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்பது படங்களில் ஒரு சில படங்கள் ரிலீஸில் மாற்றம்  இருக்கலாம் எனவும் திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்  விஜய்சேதுபதியின் கருப்பன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படங்கள் ஒரே நாளில்  வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. 


கடந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய்சேதுபதி நடித்த  றெக்க ஆகிய படங்களுடன் பிரபுதேவா நடித்த தேவி ஆகிய படங்கள் ரிலீசாகின. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com