நெட்வொர்க் பிரச்னையில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
நெட்வொர்க் இல்லாத இடத்தில் சிக்கியதால் ‘காலா’ படம் குறித்து ட்விட் செய்யமுடியவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
‘காலா’ திரைப்பட டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வசனங்களும் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் அம்பேத்கரின் அரசியல் முழக்கம் வணிக சினிமா ஒன்றின் பிரச்சார வாசகமாக மாற்றப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர். இதுவரையிலும் பல லட்சக்கணக்கானோர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ‘காலா’ டீசர் குறித்து பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், ‘காலா’ படத்தில் தலைவர் பக்கா மாஸ் என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டை தான் காலையிலிருந்து பதிவிட காத்திருந்ததாகவும், ஆனால் நெட்வொர்க் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தனுஷ், பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயண் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.