சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட்பிரபு! அடுத்த அப்டேட் எப்போ?!

சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட்பிரபு! அடுத்த அப்டேட் எப்போ?!
சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட்பிரபு! அடுத்த அப்டேட் எப்போ?!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

சிலம்பரசன் நடித்து வெற்றிபெற்ற மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து மன்மத லீலை என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த அந்த படத்துக்குப் பின், நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் அந்த திரைப் படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக தன்னுடைய குழுவினருடன் ஹைதராபாத் சென்றுள்ளார் வெங்கட்பிரபு.

இந்த நிலையில் தன்னுடைய அடுத்த தமிழ் திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் வெங்கட்பிரபு. அந்தத் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 14-ம் தேதியே வெளியாகி இருக்கவேண்டிய போதிலும், சில காரணங்களால் அறிவிப்பை படக்குழு தள்ளி வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நாக சைதன்யா படத்தை முடித்த பிறகுதான் சிவகார்த்திகேயன் பட வேலைகளை தொடங்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com