சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனும் லைகா தயாரிப்பு நிறுவனமும் இணைய இருப்பதாகவும், அது குறித்தான அப்டேட் இன்று காலை வெளியிடப்படும் என நேற்று அறிவிப்பு வெளியானது. அதன் படி, தற்போது சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் புதியபடம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லைகா நிறுவனம் சுபாஷ்கரனும் ,சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்திற்கு 'டான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் வீடியோவில் கல்லூரியும், அதை சார்ந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் ஜாலியான காட்சிகளை கொண்டும் படம் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.