\
வேலைக்காரன் 22 வெளியாகிறது

வேலைக்காரன் 22 வெளியாகிறது

வேலைக்காரன் 22 வெளியாகிறது
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ வரும் 22 தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ஜெயம் ராஜா இயக்கத்தில் முதன்முறையாக சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள திரைப்படம் ‘வேலைக்காரன்’. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆடி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வரும் 22ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மொத்தம் நீளம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் 41 நொடிகள் என குறிப்பிட்டு உள்ளார். 

‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ராஜா இயக்கி உள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com