\
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது!

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது!

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது!
Published on

மோகன் ராஜா இயக்கி வரும் வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியாகி இருந்த நிலையில் தற்போது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பிராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெமோ படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா, 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது. 
படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வேலைக்காரன் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com