\
”கதையல்ல பயணம்” - ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கும் அருவி இயக்குநரின் ’வாழ்’ டிரெய்லர்

”கதையல்ல பயணம்” - ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கும் அருவி இயக்குநரின் ’வாழ்’ டிரெய்லர்

”கதையல்ல பயணம்” - ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கும் அருவி இயக்குநரின் ’வாழ்’ டிரெய்லர்
Published on

’அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தம்மனின் ‘வாழ்’ பட டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களை தயாரித்த சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ’வாழ்’ படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தை, கடந்த 2016 ஆம் ஆண்டு விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த ‘அருவி’ பட இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தம்மன் இயக்கியிருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

டிஜே பானு, அஹ்ரவ், திவா தவான், நித்யா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை ‘அருவி’ போலவே மாறுபட்ட கதைக்களத்தில் எடுத்திருக்கிறார் அருண் பிரபு என்பதை ட்ரெய்லரே உணர்த்துகிறது. உண்மைக் கதை என்று தொடக்கத்தில் போடப்பட்டு “எல்லா பிரச்சனைகளையும் மறக்கடிக்க வைத்து பயணிக்கத் தூண்டும். நாமும் சேர்ந்து பயணித்த அனுபவம்” என்ற எழுத்துகளோடு டிரெய்லர் முடிவடைகிறது.

லாங் ஷாட்டில் வயல், கடல், அருவி, நதி, காடு என்று கதையில் இயற்கையையும் இணைத்து இதயத்தை இனிக்க வைத்து, அந்த இடங்களில் நம்மையும் பயணிக்க வைத்த அனுபத்தை டிரெய்லரிலேயே கொடுத்திருக்கிறார், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி. படத்தின் பாடல்களும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com