கையில் உலக உருண்டையுடன் சிவகார்த்திகேயன் - ‘எஸ்கே20’ பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு

கையில் உலக உருண்டையுடன் சிவகார்த்திகேயன் - ‘எஸ்கே20’ பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு
கையில் உலக உருண்டையுடன் சிவகார்த்திகேயன் - ‘எஸ்கே20’  பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே. 20’ படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு, அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் லைகாவுடன் இணைந்து தயாரித்து நடித்திருந்த ‘டான்’ திரைப்படம், கடந்த 13-ம் தேதி வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ படங்களை இயக்கிய அனூதீப்புடன் இணைந்து, தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடிக்கிறார்.

சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். காரைக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி ‘எஸ்.கே.20’ படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தினர்.

இந்தப் படத்திற்கு தனமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகியுள்ளது. படத்தில் பள்ளி ஆசிரியராக சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படும் நிலையில், படத்திற்கு ‘பிரின்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் உலக உருண்டையுடன் அமர்ந்து இருப்பதுபோல் உள்ள பர்ஸ்ட் லுக் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com