ரஜினி படத்தின் டைட்டிலை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் - புது படம் குறித்த அசத்தலான அப்டேட்!

ரஜினி படத்தின் டைட்டிலை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் - புது படம் குறித்த அசத்தலான அப்டேட்!
ரஜினி படத்தின் டைட்டிலை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் - புது படம் குறித்த அசத்தலான அப்டேட்!

சிவகார்த்திகேயனின் புதியப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் 13-ம் தேதி வெளியான ‘டான்’ படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குநர் கே.வி. அனூதீப் இயக்கத்தில் புதியப் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு, ‘பிரின்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மரியா ரியாபோஸப்கோ என்ற உக்ரைன் நாட்டு நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் இந்தப் படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.

இந்தப் படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள ‘எஸ்.கே.21’  என்ற புதியப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்தப் பட அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இதற்கு அடுத்ததாக யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வினுடன், சிவகார்த்திகேயன் புதியப் படம் ஒன்றில் கூட்டணி அமைக்கவுள்ளதாக முன்னதாக தவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த தகவலை உறுதிசெய்யும் வகையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘மாவீரன்’ என்ற படத்தின் தலைப்பே, இந்தப் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, சாந்தி டாக்கீஸின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். வித்யூ அய்யனா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

படத்தின் பெயருக்கு ஏற்ப சண்டைக்காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்பதை டீசர் காட்டுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com