வெளியானது சிவகார்த்திகேயனின் "Mr.லோக்கல்" டீசர் !

வெளியானது சிவகார்த்திகேயனின் "Mr.லோக்கல்" டீசர் !

வெளியானது சிவகார்த்திகேயனின் "Mr.லோக்கல்" டீசர் !
Published on

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr.லோக்கல்’  படத்தின் டீசர் இன்று வெளியானது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜேஷ். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். இந்நிலையில் இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். 'Mr.லோக்கல்’ என்று பெயரிடப்பட்டுள்ள அத்திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். 

'Mr.லோக்கல்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அது போல இன்று  'Mr.லோக்கல்’  படத்தின் டீசர் வெளியானது. டீசரில் சென்னையைச் சேர்ந்த லோக்கல் பையன் வெளிநாடு சென்று பணக்கார பெண்ணை காதலிப்பது போலவும், அதற்கு ஏற்பவான வசனங்களும் உள்ளன. 

வழக்கமாக நகைச்சுவையில் கலக்கும் சிவகார்த்திகேயன், நகைச்சுவைக்கு பெயர் போன இயக்குநரான ராஜேஷுடன் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறுயுள்ளது. நிச்சயம் Mr.லோக்கல் திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை தீர்க்கும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mr.லோக்கல் திரைப்படம் தொழிலாளர் தினமான மே1ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com