\
சிவாகார்த்திகேயனின் ‘டான்’ பட அப்டேட்!

சிவாகார்த்திகேயனின் ‘டான்’ பட அப்டேட்!

சிவாகார்த்திகேயனின் ‘டான்’ பட அப்டேட்!
Published on

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் சண்டைக் காட்சி நிறைவடைந்ததாக அப்படத்தின் சண்டைக்காட்சி இயக்குநர் புதிய அப்டேட் கொடுத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் மீண்டும் இணையும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு இரு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் தொடங்கியது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே.தயாரிப்பு நிறுவனமும், லைகா தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ‘அட்லி’யின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். 

கல்லூரியை பின்புலமாக கொண்டு உருவாக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சூரியும், முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, காளிவெங்கட், ஆர்.ஜே. விஜய், சிவாங்கி ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் நிறைவுபெற்றதாக சண்டைக் காட்சி இயக்குநர் விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்திருக்கிறார். இவர், உறியடி, வீரம், ஜோக்கர், ராட்சசன், சூரரைப் போற்று போன்ற படங்களுக்கும் சண்டைக் காட்சி அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com