சினிமா
’சதுரங்க வேட்டை-2’ டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்
’சதுரங்க வேட்டை-2’ டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்
அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் தயாராகியுள்ள படம், ‘சதுரங்க வேட்டை-2’. இதன் படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை வெளியிடுகிறார்.
வினோத் இயக்கத்தில் 2014 ம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான படம் ’சதுரங்க வேட்டை’. இதன் இரண்டாம் பாகத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசரை, நாளை காலை 10 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். முதல் பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா, இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.