சிபிராஜ் பட ட்ரெய்லரை.. சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரு சரத் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் #SathyaTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
ஏற்கனவே தெலுங்கில் தயாரான க்ஷனம் என்ற படத்தின் ரீமேக் தான் சத்யா. பாகுபலியில் பல்வாள்தேவனுடைய மகனாக நடித்த அதிவி சேஷ் எழுதி நடித்த கதை தான் க்ஷனம்.
தெலுங்கில் நல்ல பெயரைப் பெற்ற க்ஷனம் கதையை சைத்தான் படத்தை இயக்கிய ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழில் இயக்கியுள்ளார். கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்காமல் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்து வரும் சிபிராஜூக்கு சத்யா நல்ல பெயரை கொடுக்கும் என்று பேசப்படுகிறது.
பொன்ராம் இயக்கத்தில் #SK12 படப்பிடிப்பில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ட்ரெய்லரை வெளியிட்டதற்கு சிபிராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.