சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன் படத்தின் பெயர் வெளியானது...!

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன் படத்தின் பெயர் வெளியானது...!

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன் படத்தின் பெயர் வெளியானது...!
Published on


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

தமிழில் சயின்ஸ் பிக்சன் படங்கள் எப்போதாவது தான் வரும். அதன் வெற்றி சதவிகிதமும் கூட குறைவு தான். ஆனால், 2015’ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ என்ற சினிமா தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதற்கு அக்கதை சொல்லப்பட்டதில் இருந்த எளிமை முக்கிய காரணம்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் தனது அடுத்த படத்தை துவங்கினார். இப்படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. பெயரிடப்படாமல் இருந்த அப்படத்தின் பெயர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவாகிவரும் சிவகார்த்திகேயனின் 14’வது படத்திற்கு அயலான் என பெயரிடப்பட்டுள்ளது.

அதனை சிறிய காணொளியாக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதனை தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் உறுதி செய்திருக்கிறது. இது நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு நல்ல திரை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com