\
Sivakarthikeyan Meets Dhanush, Suriya Style.. Is He Entering Politics?
சிவகார்த்திகேயன்web

தனுஷ், சூர்யா பாணியில் சந்திப்பு.. மக்கள் குறித்து பேச்சு.. அரசியலுக்குள் நுழைகிறாரா SK?

"நாம் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது சிந்தனைத் திறன் மேம்படும். இது சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பதற்கு ஒரு மாற்றாகவும் அமையலாம்” என்றார் சிவகார்த்திகேயன்.
Published on: 

நடிகர் சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களைச் சந்தித்திருப்பது தமிழ்நாட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவர் தனது பயணம் மற்றும் கவனத்துடன் இருப்பதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசியதால் இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், அவர் எதிர்காலத்தில் அரசியலுக்குள் நுழையலாம் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

நடிகர்கள் சூர்யா, தனுஷைப்போல சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்களைச் சந்தித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அறிவுரையும் வழங்கினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் என்னை சுயமாக உருவான ஸ்டார் என்று அழைக்கிறீர்கள். ஆனால் என்னை நட்சத்திரமாக்கியது மக்கள்தான். நான் மக்களால் உருவாக்கப்பட்ட நட்சத்திரம். எங்களை விமர்சிப்பவர்கள் எப்போதும் நம்மை விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நாம் அனைவரும் அன்பால், அன்புக்காக ஒன்றிணைந்திருக்கிறோம். நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எப்போதும் அதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். நன்றாகப் படியுங்கள். நன்றாகச் சம்பாதியுங்கள். குடும்பத்திற்கு எப்போதும் முதலிடம் கொடுங்கள். தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். நாம் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது சிந்தனைத் திறன் மேம்படும். இது சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பதற்கு ஒரு மாற்றாகவும் அமையலாம்” என்றார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்pt web

நடிகர் தனுஷின் சமீபத்திய ரசிகர் சந்திப்புகள், அவர் அரசியலில் நுழையக்கூடும் என்ற யூகங்களைத் தூண்டின. அதேபோல், சூர்யாவும் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்திய சந்திப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவர் தனது பயணம் மற்றும் கவனத்துடன் இருப்பதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசியதால் இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், சிவாவை உருவாக்கியது தனுஷ்தான் என ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், சிவாவோ மக்கள்தான் எனக் கூறியிருப்பது, எதிர்காலத்தில் அவரும் தனுஷுக்குப் போட்டியாக அரசியலில் நுழையலாம் ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

Sivakarthikeyan Meets Dhanush, Suriya Style.. Is He Entering Politics?
அரசியலில் Entry கொடுக்கும் தனுஷ்.. வெளியான முதல் அறிவிப்பு.. அடுத்து தமிழ்நாடு முழுவதும்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com