\
சிவா-ராஜேஷ் கூட்டணியில் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது

சிவா-ராஜேஷ் கூட்டணியில் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது

சிவா-ராஜேஷ் கூட்டணியில் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது
Published on

ராஜேஷ் - சிவகார்த்திகேயன் கூட்டணில் உருவாகும் புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்துள்ள படம் ‘சீமராஜா’. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் சிவாக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று துவங்கியுள்ளது. இதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. “சீமராஜா” படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரே நேரத்தில் ராஜேஷ், ரவிக்குமார் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என கூறப்படுகிறது. ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சமந்தா ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com