\
விஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்!

விஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்!

விஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்!
Published on

மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "காத்து வாக்குல ரெண்டு காதல்" என்ற படம் தொடங்கியது. இதில், விஜய் சேதுபதியுடன் த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வந்தனர். ஆனால் சில வெளிவராத காரணத்தால், படம் 20 நாட்களுடன் நின்று விட்டது. தற்போது கதையில் சிறிய மாற்றங்களைச் செய்து அந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். 

இருவருக்கும் போட்டி இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்சேதுபதி நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com