\
‘டான்’ படத்தில் 'சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் இணையும் பிரியங்கா மோகன்'!

‘டான்’ படத்தில் 'சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் இணையும் பிரியங்கா மோகன்'!

‘டான்’ படத்தில் 'சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் இணையும் பிரியங்கா மோகன்'!
Published on

’டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் மார்ச் 26 ஆம் தேதி டாக்டர் படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகனின் ஒரு படம் கூட இதுவரை தமிழில் வெளியாகவில்லை. அதற்குள், ’டாக்டர் படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ’டான்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com