அக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?

அக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?

அக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். 'டாக்டர்’ படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு தமிழக சட்டமன்றத் தேர்தலால் அம்முடிவு மாற்றப்பட்டு ரம்ஜான் பண்டிகை அன்று மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா சூழலால், அன்றும் வெளியாகவில்லை. இப்படி தேதிகள் தள்ளிக்கொண்டே சென்ற நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. 

இந்த நிலையில், வரும் அக்டோபர் 14 ஆம் ’டாக்டர்’ தியேட்டர்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com