\
வேலைக்காரனில் மூன்று கெட்டப்பில் சிவகார்த்திகேயன்

வேலைக்காரனில் மூன்று கெட்டப்பில் சிவகார்த்திகேயன்

வேலைக்காரனில் மூன்று கெட்டப்பில் சிவகார்த்திகேயன்
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் அவர் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் வேலைக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரவும், மற்ற வேடங்களில் ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் வெள்ளிக் கிழமை அன்று திரைக்கு வருகிறது. இதன் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் வேலைக்காரனில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தப் படத்தில் மூன்று கெட்டப்பிலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமாக தோன்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இது புது உற்சாகத்தை கொடுக்கும் என்றும், இதுபோன்ற ஒருபடத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com