\
சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கலு’க்கு ’யு’ சான்றிதழ்!

சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கலு’க்கு ’யு’ சான்றிதழ்!

சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கலு’க்கு ’யு’ சான்றிதழ்!
Published on

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மிஸ்டர். லோக்கல்’ படத்துக்கு தணிக்கை குழு, யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

’வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், ’மிஸ்டர். லோக்கல்’. யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். எம்.ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 

சாதாரண இளைஞனான மனோகருக்கும் (சிவகார்த்திகேயன்), வசதி படைத்த கீர்த்தனாவுக்கும் (நயன்தாரா) நடக்கும் மோதல்தான் கதை. ’’நான் இயக்கிய ’சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸாக உருவாகினால் எப்படியிருக்குமோ, அதுதான், ’மிஸ்டர். லோக்கல்’. அந்தப் படத்தின் 2.0 என்றும் இந்தப் படத்தை சொல்லலாம்’’ எனத் தெரிவித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். ஆனால், ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்த ’மன்னன்’ படத்தின் மார்டன் வெர்ஷனாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிகிறது.

வரும் 17 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முயன்று வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு, அனைவரும் பார்க்கலாம் என்று ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com