70'ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்காக மீண்டும் வெளியானது சிவாஜி கணேசனின் தீபம் திரைப்படம்

70'ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்காக மீண்டும் வெளியானது சிவாஜி கணேசனின் தீபம் திரைப்படம்

70'ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்காக மீண்டும் வெளியானது சிவாஜி கணேசனின் தீபம் திரைப்படம்
Published on

மதுரையில் 70'ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்காக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தீபம் திரைப்படம், திரையரங்கில் மீண்டும் வெளியானது.

மதுரையின் பழமையான சென்ட்ரல் சினிமாஸ் திரையரங்கில், அவ்வப்போது பழைய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். அந்த வகையில், 60 மற்றும் 70-களில் பிறந்த சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீபம் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தைக் காண 300-க்கும் மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். சிவாஜி மற்றும் பிரபு ரசிகர் மன்றம் சார்பில் அவர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



1977-ம் ஆண்டு கே.விஜயன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவாஜியுடன் சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளிவந்தபோது திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 90'ஸ், மற்றும் 2K கிட்ஸ்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பீஸ்ட், கே.ஜி.எஃப் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், சிவாஜியின் படத்துக்கு தற்போதும் திரையரங்கில் கிடைத்த வரவேற்பு, பழமை என்றும் இனிமை என்பதை உணர்த்துவதாக இருந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com