\
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ‘டான்’: ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ‘டான்’: ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ‘டான்’: ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
Published on

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வரும் சிவாங்கி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியான நிலையில், இப்படத்தில் நடித்துவரும் ‘குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த சிவாங்கி சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்டோருடன் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பிடித்த ‘எங்க அண்ணன்.. எங்க அண்ணன்’, ‘உன் கூடவே பொறக்கணும்’ பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு பகிர்ந்திருக்கிறார். ‘டான்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com