நடிகை மதுமிதா பற்றி அவதூறு: கணவர் போலீசில் புகார்
நடிகை மதுமிதா பற்றி சமூக வலைத்தளம் ஒன்றில் அவதூறு கருத்துகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தமிழில், ’குடைக்குள் மழை’, ‘அமுதே’, இங்கிலீஷ்காரன், ’யோகி’, ’அறை எண் 305-ல் கடவுள்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மதுமிதா. தெலுங்கு நடிகையான இவர், அங்கும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் சிவபாலாஜியும் காதலித்து 2009-ல் ஐதராபாத்தில் திருமணம் செய்துகொண்டனர். சிவபாலாஜி தமிழில், ’இங்கிலீஷ்காரன்’ படத்தில் நடித்துள்ளார். இவர்களுக்கு தன்வின், ககன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் மதுமிதா பற்றி சமூக வலைத்தளம் ஒன்றில் அவதூறு கருத்துகளை அடையாளம் தெரியாத சிலர் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் சிவபாலாஜி புகார் செய்துள்ளார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.