\
போதை பொருள் வழக்கு: ’மாஸ் மகாராஜா’விடம் சரமாரி கேள்வி

போதை பொருள் வழக்கு: ’மாஸ் மகாராஜா’விடம் சரமாரி கேள்வி

போதை பொருள் வழக்கு: ’மாஸ் மகாராஜா’விடம் சரமாரி கேள்வி
Published on

போதை பொருள் வழக்கில், தெலுங்கு ஹீரோ ரவி தேஜா விசாரணை அதிகாரிகளின் முன் இன்று ஆஜரானார். 

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்பட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர், நடிகையிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன் தினம் சார்மி, நேற்று முமைத் கான் எனத் தொடரும் விசாரணையில் தெலுங்கு சினிமாவின் ‘மாஸ் மகாராஜா’வான ரவிதேஜா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் விசாரணைக் குழு முன் இன்று ஆஜரானார். 
தெலங்கானாவில் உள்ள அக்பரி பவனில் இன்று காலை 10 மணிக்கு ஆஜரான அவரிடம் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர். அனைத்துக்கும் தெளிவாகப் பதில் சொன்னாராம் ரவி தேஜா. 

போதை பொருள் வழக்கில் விசாரிக்கப்படும் 10-வது பிரபலம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com