\
சார் இந்திக்கு போறீங்களா? பாடலாசிரியர் விவேகாவிடம் கேள்வியெழுப்பிய உதயநிதி

சார் இந்திக்கு போறீங்களா? பாடலாசிரியர் விவேகாவிடம் கேள்வியெழுப்பிய உதயநிதி

சார் இந்திக்கு போறீங்களா? பாடலாசிரியர் விவேகாவிடம் கேள்வியெழுப்பிய உதயநிதி
Published on: 

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், பாடலாசிரியர் விவேகாவிடம் இந்தி திரையுலகுக்கு செல்கிறீர்களா என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார்.

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 'தி வாரியர்' என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய 'புல்லட்' பாடல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது, பாடலாசிரியர் விவேகாவை இந்தி கற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினார். அப்போதுதான் மற்ற மொழிகளிலும் பாடல் எழுதலாம் எனவும் தெரிவித்தார். இதனை குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், 'விவேகா சார் இந்திக்கு போறீங்களா?' என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com