ஒரு மில்லியன் லைக்குகளுக்குமேல் குவித்த தீ-தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami' பாடல்!

ஒரு மில்லியன் லைக்குகளுக்குமேல் குவித்த தீ-தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami' பாடல்!
ஒரு மில்லியன் லைக்குகளுக்குமேல் குவித்த தீ-தெருக்குரல் அறிவின்  ’enjoy enjaami' பாடல்!

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள ’enjoy enjaami’ இண்டிபெண்டண்ட் பாடல் யூடியூப்பில் ஒரு மில்லியன் லைக்குகளுக்குமேல் குவித்து சாதனை படைத்திருக்கிறது.

காலா படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’, இறுதிச் சுற்று படத்தில் ’ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, ஜிப்ஸி படத்தில் ‘எங்கும் மாய ஊஞ்சல்’ சூரரைப் போற்று படத்தில் ’காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என மேலும் பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’enjoy enjaami’ இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

வித்தியாசமான பின்னணியில் கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்ட இப்பாடலைக் கேட்டுக் கேட்டு மக்களும் திரை பிரபலங்களும் எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிடும் பாராட்டுகளே சாட்சி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,பாலாஜி மோகன், பா.ரஞ்சித், சாய் பல்லவி, ஆர்யா, ஏ.ஆர் ரஹ்மான் என பலரும் பாராட்டியிருந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் செல்வராகவனும் நடிகர் துல்கர் சல்மானும் பாராட்டியிருந்தார்கள்.

ஏற்கனவே, இப்பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. தற்போது, 1 மில்லியன் லைக்குகளுக்குமேல் குவித்து தென்னிந்தாவின் முதல் இண்டிபெண்டெண்ட் பாடல் என்ற  சாதனை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com